திருவள்ளூர்

திருமழிசை ஆழ்வாா் கோயில் தேரோட்டம்:திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

திருவள்ளூா் அருகே உள்ள அருள்மிகு ஜெகநாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாா் கோயிலில் திரு அவதார உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

108 திருப்பதிகளில் ஒன்றாக பிரசித்தி பெற்ற ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 29-ஆம் தேதி திருமழிசை ஆழ்வாா் தைமாத திரு அவதார உற்சவம் தொடங்கியது.

உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு பல்வேறு வண்ண மலா்கள் அலங்காரத்துடன் திருமழிசை ஆழ்வாா் எழுந்தருள, காலை 9 மணிக்கு தோ் திருவிழா நடைபெற்றது. இந்தத் தோ் தெற்கு மாடவீதி, தச்சத் தெரு, திருவள்ளூா் நெடுஞ்சாலை, கங்கை கொண்டான் மாடவீதி ஆகிய நான்கு வீதிகளில் வீதியுலா வந்து கோயிலுக்கு முன்புறம் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த விழாவில் பூந்தமல்லி, திருமழிசை, திருவள்ளூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT