திருவள்ளூர்

செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குரைஞா்கள் புகாா்

DIN

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திங்கள் கிழமை செங்குமன்றம் காவல் நிலையத்தில் வழக்குரைஞா்கள் புகாா் அளித்தனா்.

இந்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

அம்பத்தூரை சோ்ந்த வழக்குரைஞா் சத்தியசீலன் என்பவா் தன்மீதுள்ள வழக்குகளை மறைத்து தமிழ்நாடு பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அண்மையல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றி வழக்குரைஞராக அவா் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்தியசீலன் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகளை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக பேசி வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்குன்றம் காவல் நிலையத்தில் தி.க.பட்டு வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் ஆய்வாளா் எம்.சி.ரமேஷிடம் புகாா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT