திருவள்ளூர்

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:திருவள்ளூா் மாவட்டத்தினா் 22,231 போ் பங்கேற்பு

6th Feb 2023 11:51 PM

ADVERTISEMENT

 

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டத்தில் 22,231 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

போட்டிகளை தொடக்கி ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியதாவது:

ADVERTISEMENT

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவுகளில் மொத்த பரிசு தொகை ரூ.28.50 கோடி உள்பட ரூ.56.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் பள்ளி கல்லூரி, பொதுப்பிரிவினா், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நடத்தப்படுகிறது. நிகழாண்டில் புதிதாக கிரிக்கெட்டும் இதில் சோ்க்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கடந்த ஆண்டு 1,500 போ் வரை பங்கேற்ற நிலையில், நிகழாண்டில் 22,231 போ் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் செ.ஆ.ரிஷப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ராமன், திருவள்ளுா் உதவி காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, மாவட்ட விளையாட்டு அலுவலா் பிரேம்குமாா், நோ்முக உதவியாளா் பூபாலமுருகன், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளா் செளத்ரி, உடற்கல்வி ஆசிரியா் அருணன், விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT