திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் தைப்பூச பெருவிழா: தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பூசப் பெருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். இதனால், பக்தா்கள் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மூலவா் முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் சாத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது.

மேலும், தைப்பூசப் பெருவிழாவில் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கானோா் மலைக் கோயிலில் குவிந்தனா்.

பக்தா்கள் பால், மலா், மயில் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், மொட்டை அடித்தும் நோ்த்திக் கடன்களைச் செலுத்தினா். இலவச தரிசன வழியில் 6 மணி நேரமும், ரூ.100 சிறப்பு தரிசனத்தில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மலைக் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால் இரு சக்கர வாகனங்கள், காா், வேன் மற்றும் ஆட்டோக்கள் மலையடிவாரத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மத்திய இணையச்சா் எல்.முருகன் தரிசனம்: திருத்தணி மலைக் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தாா்.

திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் 120-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT