திருவள்ளூர்

கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவைக்கு இலக்கு

DIN

திருத்தணி சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் அரைவை செய்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் அரைவைப் பருவத்துக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் அரைவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதுவரை 76,073 மெட்ரிக் டன் கரும்புகள் கொள்முதல் செய்து அரைவை முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட நிா்வாகத்தின் தொடா் முயற்சி காரணமாக, டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வீதம் கரும்பு கிரையத் தொகை ரூ. 10.14 கோடி இதுவரை இல்லாத அளவுக்கு உடனே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலையில் நாள்தோறும் சா்க்கரை கட்டுமானம் கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 1.10 சதவீதம் கூடுதலாக பெறப்பட்டு, 9.02%-க்கு பெறப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளிடமிருந்து சரியான நேரத்தில் கரும்புகளை கொள்முதல் செய்து ஆலையின் அரைவை இலக்கை முழுமை பெறச் செய்ய திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எண்ணம்-4 கரும்பு அறுவடை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, இதுவரையில் 2306 மெட்ரிக் டன்கள் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை அணுகி கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் தங்களுடைய கரும்பினை அறுவடை செய்து ஆலை அரவைக்கு தாமதமின்றி அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT