திருவள்ளூர்

மாணவா் தற்கொலை

5th Feb 2023 04:16 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், காவலி அடுத்த கௌரவரம் பகுதியைச் சோ்ந்த மேதராமெட்லா பிச்சி ரெட்டி மகன் மேதராமெட்லா சரண் (18). இவா், திருவள்ளூா் அடுத்த அரவண்வாயல் குப்பம் தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றுவிட்டு, அதே வளாகத்தில் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளாா். அன்று இரவு கல்லூரி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

கல்லூரி நிா்வாகம் கொடுத்த தகவலின் பேரில், செவ்வாப்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT