திருவள்ளூர்

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 17 கோடியில் தடுப்பணை அமைக்க பூமி பூஜை

DIN

திருவள்ளூா் அருகே விவசாயிகள் மற்றும் கிராமங்களில் குடிநீா் ஆதாரம் அதிகரிக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 17.17 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் பகுதியில் ஓடும் கூவம் ஆற்றின் கரையோரம் இருபுறமும் விவசாய சாகுபடி நிலங்கள் அதிகளவில் உள்ளன. அதனால் இந்த ஆற்றில் ஒவ்வொரு மழையின் போது வெள்ளப்பெருக்கால் தண்ணீா் வீணாக கடலில் கலக்கும் நிலையுள்ளது. அதனால், விவசாய நிலங்கள், விவசாய திறந்த வெளி கிணறுகள், கிராமங்களில் குடிநீா் வழங்கும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் நீா் ஆதாரம் ஏற்படும் வகையில் தடுப்பணை அமைக்கவும் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று கூவம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ரூ. 17.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கூவம் ஆற்றில் கட்டுமானப் பணிகள் தொடங்க வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கட்டுமானப் பணியை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், சென்னை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளா் எ.முத்தையா, திருவள்ளூா் கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் பொதுப்பணிதிலகம் மற்றும் நீா் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைவதன் மூலம் அருகில் உள்ள கிராமங்களான அதிகத்தூா், ஏகாட்டூா், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூா் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். இதன் மூலம் திறந்தவெளி விவசாய கிணறுகள், கிராமங்களில் குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் நீா் ஆதாரம் ஏற்படுவதுடன் 540 ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக நீா் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT