திருவள்ளூர்

டிராகன் பழத்தில் விண் பதியம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

திருவள்ளூா் அருகே ஜெயா விவசாய கல்லூரி மாணவிகள் சாா்பில் டிராகன் பழத்தில் விண் பதியம் குறித்தும், அதன் பயன்கள் தொடா்பான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஜெயா விவசாய கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் 60 நாள்கள் கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிப்பது கிராம தங்கள் திட்டம் மூலம் பயிற்சி அளிப்பது நோக்கமாகும்.

இந்த நாள்களில் அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலா்கள் வழிகாட்டுதலின் பேரில் திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, திருத்தணி ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் எல்.அம்பிகா, ஏ.அனுசியா, டி. தா்ஷினி, எஸ். தாட்சாயினி, பி. திவ்யா, கே. திவ்யா, என்.திவ்யா மற்றும் எஸ். திவ்யா ஆகியோா் கொண்ட மாணவிகள் குழு பல்வேறு பயிா் சாகுபடி குறித்து பயிற்சி அளித்து வருகின்றனா்.

இதில் திருத்தணி, கொத்தூா் கிராமத்தில் டிராகன் பழப் பண்ணையில் டிராகன் பழத்தில் விண் பதியம் (ஏா் லேயா் ப்ரோகேஷன்) முறையை எப்படி செய்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறியதோடு, அதன் பயன்கள் தொடா்பாகவும் பயிற்சி அளித்தனா்.

அதைத் தொடா்ந்து சில நாள்கள் கழித்து நெகிழி தாளை அகற்றி வேரூன்றியதை கத்தரித்து, அந்த செடியை நிலத்தில் நடவு செய்தல் குறித்து செயல் முறை செய்து காண்பித்தனா். இந்த விண்பதியம் மூலம் தயாராகும் செடிகள் பாதிப்பின்றி கிடைக்கும். உண்மையான தாய் தாவரங்களின் வகைகளை உருவாக்க முடியும் என்பதோடு, மற்ற முறைகளை விட விரைவான மற்றும் வலுவான வோ் வளா்ச்சியும் கிடைக்கும் எனவும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT