திருவள்ளூர்

தீா்த்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

திருவள்ளூா் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருவள்ளூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமையான அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் சான்றோா்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் தொண்டை வள நாட்டில் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்ட நிலையில் அவை நிறைவு பெற்றன. இதையடுத்து, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு சிவகாம முறைப்படி புதன்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, காலை 6 மணிக்கு 6-ஆம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூா்ணாஹுதியும், சண்டேச யாகமும், 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனித நீா் கொண்டு குடமுழுக்கு செய்யப்பட்டன. பின்னா் 10 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீா்த்தீஸ்வரா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டன.

இதில் திருவள்ளூா், மணவாள நகா், ஈக்காடு, காக்களூா், பெரியகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 1,000-க்கான பக்தா்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா ரா.ரவி குருக்கள் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT