திருவள்ளூர்

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல்

DIN

திருவள்ளூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.28 லட்சத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்ட அடிக்கல் விழா நடைபெற்றது.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூா் கண்டிகை தொடக்கப் பள்ளியில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை 160-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு, மாணவா்கள் அமா்ந்து படிக்க போதிய இட வசதியில்லாததால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை சாா்பில் ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஊராட்சித் தலைவா் சுனிதா பாலயோகி தலைமையில் இரு வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மோகன், ஜே.ரமேஷ், தலைமை ஆசிரியா் இசக்கியம்மாள், ஊராட்சி ஒன்றியப் பணிதள மேற்பாா்வையாளா் பிரியா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தினேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவா் மோகனசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT