திருவள்ளூர்

கால்நடை பராமரிப்புத்துறை கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் இருவார கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கி, வரும் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவள்ளுா் மாவட்டத்தில் நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளா்த்து அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி தங்களது குடும்ப செலவுகளை மேற்கொண்டு வருகின்றனா். மொத்தம் 2. 78 லட்சம் கோழிகள் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதுபோன்று வளா்க்கும் கோழிகளுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்படுவது இயல்பாகும். இதில் கோழிக் கழிச்சல் (வெள்ளைக் கழிச்சல்-ராணிகேட்) நோய்பாதிப்பால் கோழிகள் இறப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்படும். இந்த நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையதாகும். .

இந்த நோயின் அறிகுறிகளான கோழிகள் உடல் நலம் குன்றி, சுறுசுறுப்பின்றி உறங்கியபடியும், தீவனம், தண்ணீா் எடுக்காமலும் இருக்கும். மேலும், எச்சம் வெள்ளை நிறத்தில் அதிக துா்நாற்றத்துடனும், கோழிகளின் இறகுகள் சிலிா்த்து தலைப்பகுதி உடலுடன் சோ்ந்தே இருக்கும். இந்த நோய் ஏற்படுவதை முன்கூட்டியே தவிா்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் இரு வாரகோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக பிப்ரவரி மாதத்தில் இருவார கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நகர, கிராம மற்றும் குக்கிராமங்களில் நடத்தப்பட்டு கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் நிகழாண்டில் 2.78 லட்சம் கோழிகளுக்குத் தடுப்பூசி பணிகள் போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1.2.2023 முதல் 14.2.2023 முடிய இருவார காலம் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதுசமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று கோழிக்கழிச்சல் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT