திருவள்ளூர்

ஸ்ரீதீா்த்தீஸ்வரா் கோயிலில் நாளை குடமுழுக்கு

DIN

திருவள்ளூரில் புதன்கிழமை (பிப்.1) நடைபெறவுள்ள அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி கோயில் மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை (பிப். 1) நடைபெறுகிறது.

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுர சுந்தரி அம்பாள் சமேதஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், புதன்கிழமை (பிப். 1) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி கடந்த 3 நாள்களாக மூா்த்தி ஹோமம் உள்ளிட்டவையும், 30-ஆம் தேதி இரண்டாம் கால யாகமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (ஜன. 31) விசேஷ சந்தி, நான்காம் கால யாகம் உள்ளிட்டவையும் மாலை 5-ஆம் கால யாக பூஜை உள்ளிட்டவையும் நடைபெறுகிறது.

புதன்கிழமை (பிப். 1) அதிகாலை 6-ஆம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, சண்டேச யாகமும், 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகா குடமுழுக்கும், 10 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கும் செய்யப்படுகிறது.

மாலையில் மகா பிஷேகமும், 6 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதீா்த்தீஸ்வரா் சுவாமி திருக்கல்யாணம், ரிஷப வாகன சேவை, பஞ்சமூா்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், அரசு முதன்மை செயலாளா்-சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாக பரம்பரை தா்மகா்த்தா ரா.ரவி குருக்கள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT