திருவள்ளூர்

வருமான வரி பிடித்தம் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

DIN

சென்னை வருமான வரித் துறை சாா்பில் நடைபெற்ற டி.டி.எஸ். வரி பிடித்தம் தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் காக்களூா் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலை உற்பத்தியாளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய வளாக கூட்டரங்கத்தில் சென்னை வருமான வரித் துறை அலுவலகம் மற்றும் காக்களூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்கமும் இணைந்து நடத்திய வருமான வரி பிடித்தம் (டி.டி.எஸ்) குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா் தலைமை வகித்தாா். இதில் காக்களூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வருமான வரித் துறை அதிகாரிகள் டி.வி.ஸ்ரீதா், எல்.ராஜாராமன் ஆகியோா் பங்கேற்று, டி.டி.எஸ். வரி பிடித்தம் தொடா்பான பிரிவுகளை விளக்கமாக எடுத்துரைத்தனா். அப்போது, சட்டப்படி ஒருவா் பெருகிற வருவாய் அல்லது தொழில் மூலம் கிடைக்கும் வருவாய் என தன்மை மாறுபடும். அதன் அடிப்படையில், ஒவ்வொருவரும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதில் டிடிஎஸ் வரி பிடித்தம் முன்கூட்டியே செய்யப்படுகிறது. இந்தத் தொகை கணக்கு சரிபாா்க்கும் போது டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 16 லட்சம் கோடி கிடைக்கிறது. அதில், டிடிஎஸ் மூலம் மட்டுமே ரூ. 7 லட்சம் கோடி வருவாய் கிடைப்பதால் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

தொழில் நடத்துவோா் செலவு செய்யும்போது சரியான விதத்தில் வரி பிடித்தம் செய்தல் முக்கியத்துவம் குறித்தும், வரி பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் குறிப்பிட்ட காலகட்டத்தில் செலுத்த வேண்டிய கட்டாயம் குறித்தும், காலாண்டு வரி பிடித்தம் டி.டி.எஸ். படிவங்களை குறித்த காலத்தில் அதற்கான இணையதளத்தில் தாக்கல் செய்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனா்.

மேலும், இந்தக் கருத்தரங்கில் டிடிஎஸ் காலாண்டு படிவம் தாக்கல் செய்யும்போது, அதில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்தும் தொழிற்சாலை உற்பத்தியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் காக்களூா் தொழிற்பேட்டையில் தொழிற்சாலை நடத்தி வரும் உற்பத்தியாளா்கள் மற்றும் தொழில் முனைவோா்கள் ஆகியோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை சென்னை வருமான வரித்துறை மற்றும் காக்களூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT