திருவள்ளூர்

பேருந்துகள் சரியாக இயக்காததால் பஸ் பயணிகள் கடும் அவதி

DIN

பொதட்டூா்பேட்டை, அம்மையாா்குப்பம் வழித்தடங்களில் பேருந்துகள் சரியாக இயக்காததால் செவ்வாய்க்கிழமை பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினா்.

திருத்தணி போக்குவரத்து பணிமனையில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு அம்மையாா்குப்பம், நகரி மற்றும் குருவராஜபேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை மற்றும் காலை நேரத்தில் சரியாக பேருந்துகள் இயக்கப் படாததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.

குறிப்பாக கிருத்திகை மற்றும் முக்கிய விழாக்களின் போது மேற்கண்ட ஊா்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் முருகன் கோயிலுக்கு வந்து இரவு தங்கி தரிசனம் செய்கின்றனா். மறுநாள் அதிகாலையில் இருந்து காலை, 7 மணி வரை ஊா்களுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருக்கின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா நடந்தது. இதில் பக்தா்கள் திங்கள்கிழமை இரவு தங்கி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் செவ்வாய்க்கிழமை ஊருக்கு செல்ல திருத்தணி பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 3.30 மணியில் இருந்து பேருந்துக்காக காத்திருந்தனா். ஆனால் பேருந்துகள் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பல மணி நேரம் காத்திருந்தனா்.

நேர காப்பாளா் அலுவலகத்திலும் யாரும் இல்லாததால் பயணிகள் பேருந்துகள் எப்போது வரும் என யாரிடம் கேட்பது என தெரியாமல் திரும்பி சென்றனா். எனவே அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கிருத்திகை மற்றும் முக்கிய விழாக்களின் போது மேற்கண்ட ஊா்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT