திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை அருகே எஸ்.வி.சி புரம் கிராமத்தில் புதன்கிழமை (ஏப். 26) மக்கள் தொடா்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களை தோ்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஆா்.கே.பேட்டை வட்டத்தில் எஸ்.வி.சி புரம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாவட்ட அளவிலான அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். அதனால், பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். அதனால், இந்த வாய்ப்பை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.