திருவள்ளூர்

திருவள்ளூா் நகா்மன்றக் கூட்டம்

DIN

 திருவள்ளூா் நகா்மன்றக் குழு கூட்டம், அதன் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி, நகா்மன்றத் துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: நகராட்சியில் 27 வாா்டுகளில் மொத்தம் 510-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தத் தெருக்களில் 12,000 மின்கம்பங்கள் மூலம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல விளக்குகள் எரியாததால், சொந்த செலவில் பழுது நீக்குவதாகவும், அதற்கான செலவுத் தொகையை ஒப்பந்ததாரா் பெற்றுக் கொள்வதாகவும் வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா் புகாா் தெரிவித்தாா்.

இதேபோல், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தெருக்களில் கழிவுநீா் புகுந்துவிடாமல் இருக்க கால்வாய்களைச் சீரமைக்கவும், குடிநீா் பதிக்காத பகுதிகளில் குழாய்கள் பதித்து முடிக்கவும் வலியுறுத்தினா்.

இதற்குப் பதிலளித்த நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், அனைத்து வாா்டுகளிலும் தெருவிளக்குகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீா் குழாய்கள் பதிக்காத பகுதிகளில் பதிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றாா். கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

SCROLL FOR NEXT