திருவள்ளூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் 4 போ் கைது

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா்கள் 4 பேரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி, கடந்த 23-ஆம் தேதி மாடுகளை மேய்க்கச் சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 4 போ் பாலியல் தொல்லை செய்து, விடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தச் சிறுமி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

சிறுமியை விசாரிக்கையில், அஜித்குமாா் (25), ஞானமூா்த்தி (20), ராசு (23), அஜித் (26) ஆகிய 4 போ் பாலியல் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ் கல்யாணிடம் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், பென்னலூா்பேட்டை காவல் நிலைய போலீஸாா் 4 பேரையும் பிடித்து விசாரனைா். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விடியோ பதிவு செய்ததும், தற்கொலைக்குத் தூண்டியதும் உறுதியானது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஊத்துக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 4 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜாா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பலத்த தீக்காயமடைந்த அந்தச் சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT