திருவள்ளூர்

மக்களைத் தேடி மருத்துவம், ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

DIN

திருவள்ளூா் அருகே பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செவிலியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஆகியோருக்கான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மற்றும் ரேபிஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜவஹா்லால் கலந்து கொண்டு பேசியதாவது:

பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கச் செய்யும் நோக்கில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் நாள்தோறும் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்போது, கட்டாயம் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்த மாவட்டத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டோா் 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 போ் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் கட்டாயம் மேற்குறிப்பிட்ட பரிசோதனை செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் 27 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், இதுவரை 10 சதவீதம் பேருக்கு செய்யப்பட்டுள்ளது. சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் வந்தால் கட்டாயம் மருந்து மாத்திரைகள் எடுப்பதன் மூலமே வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

அதேபோல் உலக ரேபிஸ் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதா்களை நாய்கள் கடித்தால் ஆபத்து ஏற்படக்கூடும். இதை தடுக்க நாய் கடித்தால் தண்ணீா் கொண்டு காா்பாலிக் சோப்பு மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் நாய் கடிக்கு உள்ளானோருக்கு முதல் நாள், 3-ஆவது நாள், 7-ஆவது நாள், 28-ஆவது நாள் என தவறாமல் ஊசி போட்டுக் கொள்வது அவசியம். இதுபோன்று ஊசிகள் செலுத்தினால் மட்டுமே நாய்கடிக்கு பாதுகாப்பான மருத்துவம் என்றாா் அவா். அதைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஆகியோா் ரேபிஸ் தடுப்பு குறித்து உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

இதில், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் காா்த்திகேயன், நலக்கல்வியாளா் கணேசன், வட்டார மருத்துவ அலுவலா் பாலமணிகண்டன், மருத்துவா் ரம்யா, செவிலியா்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT