திருவள்ளூர்

நிறுத்தப்பட்ட சாதாரண பேருந்து மீண்டும் இயக்கம்

DIN

திருநின்றவூரிலிருந்து பூந்தமல்லிக்கு நிறுத்தப்பட்ட சாதாரண பேருந்தை சேவையை மீண்டும் புதன்கிழமை அமைச்சர் சா.மு.நாசர் இயக்கி வைத்தார்.
 ஆவடி அருகே திருநின்றவூரிலிருந்து கொசவன்பாளையம், கொட்டாம்பேடு புதுச்சத்திரம், வெள்ளவேடு, திருமழிசை வழியாக பூந்தமல்லிக்கு (தடம் எண் 54 ஏ) மாநகர சாதாரண பேருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது.
 இந்தப் பேருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தடம் எண். 597 சி என்ற பெயரில் சொகுசு பேருந்து இயக்கப்பட்டது.
 இதனால், பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து பூந்தமல்லிக்கு பயணம் செய்து வந்தனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சொகுசு பேருந்தை, சாதாரண பேருந்தாக மாற்றி இயக்குமாறு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 இதையடுத்து, அவர் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி, சொகுசுப் பேருந்தை சாதாரண பேருந்தாகவும், மகளிர் செல்ல இலவச பேருந்தாகவும் மாற்றும்படி உத்தரவிட்டார்.
 இதையடுத்து, புதன்கிழமை காலை திருநின்றவூர் பேருந்து நிலையத்திலிருந்து (தடம் எண்.597 சி) சாதாரணப் பேருந்து மற்றும் மகளிர் இலவச பேருந்து சேவையை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, திருநின்றவூர் நகர்மன்றத் தலைவர் உஷாராணி ரவி, துணைத் தலைவர் சரளா நாகராஜ், நகராட்சி ஆணையர் (பொ) ரமேஷ், திருநின்றவூர் நகர திமுக செயலர் தி.வை.ரவி உள்ளிட்ட பலர் கலந்து
 கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT