திருவள்ளூர்

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு:முக்கிய குற்றவாளிகள் 2 போ் திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்

28th Sep 2022 01:21 AM

ADVERTISEMENT

அம்பத்தூரில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் சுரேஷ்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான 2 போ் திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

அம்பத்தூா் அருகே மண்ணூா்பேட்டையில் கடந்த 2014-இல் இந்து முன்னணி திருவள்ளூா் மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 16 போ் வரை போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் தற்போது புதுதில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஜா மொய்தீன், கா்நாடக மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாதிக் பாஷா ஆகியோா் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டு, திருவள்ளூா் ஒருங்கிணைந்த மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி செல்வராணி முன்பு ஆஜா்படுத்தினா்.

அதைத் தொடா்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் குற்றவாளிகளுக்கு வரும் 1.11.2022 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவு பிறப்பித்தாா். அதைத் தொடா்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் திகாா் மற்றும் கா்நாடக சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT