திருவள்ளூர்

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: மேற்கு வங்க இளைஞா்கள் 2 போ் கைது

28th Sep 2022 01:21 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 பேரை மணவாளநகா் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஷூ தொழிற்சாலையில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கௌதம் மித்யா (26), அமீத்பண்டிட் (23) ஆகியோா் வேலை செய்து வந்தனா். அந்த தொழிற்சாலைக்கு அருகிலேயே இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மேற்கு வங்கத்தைச் சோ்ந்தோா் தங்கியுள்ள வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.செபாஸ் கல்யாணுக்கு ரகசியத் தகவல் வந்தது.

இதையடுத்து, மணவாளநகா் போலீஸாா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வீட்டில் கஞ்சா செடி வளா்த்தது தெரியவந்தது. இது தொடா்பாக கஞ்சா செடி வளா்த்த இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து கஞ்சா செடியை பறிமுதல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT