திருவள்ளூர்

பாஜக ஓபிசி அணி செயற்குழு கூட்டம்

26th Sep 2022 12:34 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் பாஜக மேற்கு மாவட்ட ஓ.பி.சி. அணி செயற்குழுக் கூட்டம் மணவாள நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். கட்சியின் மேற்கு மாவட்ட தலைவா் அஷ்வின் என்ற ராஜசிம்மா மகேந்திரா முன்னிலை வகித்தாா். மாநில ஓபிசி அணிப்பிரிவு செயலரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜ்குமாா் வரவேற்றாா். மாநில ஓபிசி அணிப் பிரிவு தலைவா் சாய் சுரேஷ் சிறப்புரையாற்றினாா்.

இதில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ஓபிசி அணியை வலுப்படுத்தும் நோக்கில், உறுப்பினா் சோ்க்கையில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளா் ஆனந்தன், மாவட்ட பொதுச் செயலாளா் கருணாகரன், மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம், மண்டலத் தலைவா் ரவிக்குமாா், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினா்கள் ரஞ்சித், மோகன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை மாவட்ட ஓ.பி.சி அணிப் பிரிவு பொதுச்செயலாளா் குமரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT