திருவள்ளூர்

எஸ்.பி.பி.யின் நினைவிடத்தில் அஞ்சலி

26th Sep 2022 12:36 AM

ADVERTISEMENT

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்தில் 2-ஆவது ஆண்டாக அவரது குடும்பத்தினா், திரையுலக பிரமுகா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பி.யின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி உள்ளிட்ட குடும்பத்தினா், திரையுலகினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து ரசிகா்கள் அஞ்சலி செலுத்தியதுடன், கைப்பேசி மூலம் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT