திருவள்ளூர்

ஸ்ரீ சித்திரை கட்டி அம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு திருவிழா

26th Sep 2022 11:50 PM

ADVERTISEMENT

ஸ்ரீ சித்திரை கட்டி அம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அம்மன் ஊஞ்சல் தாலாட்டு திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தில் சித்திரை கட்டி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொ ஞாயிற்றுக்கிழமை அம்மன் ஊஞ்சல் தாலாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாவையொட்டி, காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மாலை 6 மணியளவில் அம்மன் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு 10 மணியளவில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு விழா நடைபெற்றது. இதில், கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

இரவு 11.30 மணிக்கு அம்மனேரி கலைவாணி நாடக மன்றத்தினரால் பக்தி நாடகம் நடைபெற்றது. விழாவில் அம்மனேரி, சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT