திருவள்ளூர்

புழல் சிறையில் இருந்து 12 போ் விடுதலை

25th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

அண்ணா பிறந்த நாளையொட்டி, 12 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, புழல் மத்திய சிறையில் 12 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனா். அவா்களுக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை சிறை அதிகாரிகள் வழங்கி அனுப்பி வைத்தனா்.

பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள் இன்னும் சில நாள்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவா் என புழல் சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT