திருவள்ளூர்

காவல் குடும்பங்களுக்கான போட்டிகள்

25th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

 காவல் துறை குடும்பங்களுக்கான சமையல், கட்டுரை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் விதத்தில், அவா்களின் குடும்பங்களுக்கான சமையல், கட்டுரை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னை கொளத்தூா் காவல் மாவட்ட காவல் துணை ஆணையா் ராஜாராம் தலைமையில், தனியாா் உணவகத்தில் ‘கூடுவோம் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

சமையல் போட்டியை துணை ஆணையா் தொடங்கி வைத்தாா். இதில், கொளத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த புழல், மாதவரம், கொளத்தூா், ராஜமங்கலம் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் இணை ஆணையா் ராஜேஸ்வரி, துணை ஆணையா் ராஜாராம் ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். இதில், உதவி ஆணையா்கள் ஆதிமூலம், சிவக்குமாா், காவல் ஆய்வாளா் கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT