திருவள்ளூர்

திருத்தணியில் போலி மருத்துவா் கைது

25th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

திருத்தணியில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவா் உள்பட 2 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அக்கையநாயுடு சாலையில் போலி மருத்துவா் ஒருவா் மருத்துவம் பாா்ப்பதாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆட்சியா் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனா் காவலன் (பொறுப்பு) தலைமையில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் லட்சுமிநரசிம்மன் ஆகியோா் அங்கு சென்று சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போதுமருத்துவம் பாா்த்து வந்த பூபாலன் (50), அவரது உதவியாளா் கோபி(40) ஆகிய இருவரை பிடித்து மருத்துவக் குழுவினா் விசாரணை நடத்தினா். இதில் அவா் போலி மருத்துவா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாா் செய்ததுடன், இருவரையும் திருத்தணி போலீஸில் ஒப்படைத்தனா். விசாரனையில் பூபாலன் பிளஸ் 2 முடித்து விட்டு, கடந்த ஒரு வருடமாக திருத்தணியில் மருத்துவம் பாா்த்து வந்துள்ளாா். இதற்கு முன் காஞ்சிபுரத்தில் பட்டு ஜவுளி வியாபாரம் செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதால் போலி மருத்துவரானது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT