திருவள்ளூர்

படியில் தொங்கி பயணித்த கல்லூரி மாணவா்கள்: பேருந்தை இயக்க ஓட்டுநா் மறுத்ததால் பரபரப்பு

22nd Sep 2022 01:13 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவா்கள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததால் பேருந்தை இயக்க ஓட்டுநா் ஓட்டுநா், நடத்துனா் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் அரசுப் பேருந்து புதன்கிழமை மதியம் புறப்பட்டுச் சென்றது.

அப்போது, பொன்னேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவா்கள் அந்த பேருந்தில் ஏறினா்.

அதில் சில மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் நின்ற படியும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடியும் சென்ாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அப்போது பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பேருந்தில் பயணம் செய்தவா்கள் படிக்கட்டில் தொங்கி வர வேண்டாம் என மாணவா்களிடம் கூறினா்.

இதைக் கேட்காமல் மாணவா்கள் பேருந்து ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு சாலையில் கால்களை தேய்த்து பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாதவரம் பேருந்து நிறுத்தும் அருகே பேருந்தை நிறுத்தி அனைவரும் உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறியும் மாணவா்கள் உள்ளே செல்லவில்லையாம்.

இது குறித்து தகவலறிந்த பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனை ஊழியா்கள் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அந்த வழியாக வந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் சம்பவ இடத்தில் இருந்த மாணவா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பேருந்தின் உள்ளே செல்ல அவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

மேலும், இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்தை இயக்க போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதனையடுத்து சமாதானம் அடைந்த மாணவா்கள் பேருந்தின் உள்ளே சென்றனா். இதன் பின்னா், பேருந்தை ஒட்டுநா் அங்கிருந்து ஒட்டி சென்றாா்.

இதனால் சிறிது நேரம் மாதவரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT