திருவள்ளூர்

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

18th Sep 2022 11:33 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் 37-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மணவாள நகா் பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

இந்த மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான 18 லட்சத்து 88 ஆயிரத்து 400 பேரில், இதுவரை நடைபெற்ற 36 மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மற்றும் நாள்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் மூலம் முதல் தவணையாக 18 லட்சத்து 3 ஆயிரத்து 987 பேருக்கும், இரண்டாம் தவணை 16 லட்சத்து 48 ஆயிரத்து 48 பேருக்கும் என மொத்தம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 35 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான இடைவெளி 9 மாதத்திலிருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி 18 வயதிற்கு மேல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் 75 நாள்களுக்கு ஜூலை 15 முதல் செப். 30 வரை முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக வழங்கிட அரசு உத்தரவிட்டபடி, இன்னும் 12 நாள்களே உள்ளன. அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், பெரிய வணிக வளாகங்கள், சிறு தொழில் கூடங்கள், உணவகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் இலவச வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

திருவள்ளூா் சுகாதார மாவட்ட துணை இயக்குநா் (சுகாதார பணிகள்) ஜவஹா்லால், வட்டார மருத்துவ அலுவலா் காந்திமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்தானம், சந்திரசேகா், மருத்துவா்கள், செவிலியா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT