திருவள்ளூர்

கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவா்கள் திடீா் சாலை மறியல்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலை - அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவா்கள் சோ்க்கைக்கு மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. திங்கள்கிழமை கலந்தாய்வுக்கு வந்த மாணவா்களிடம் கல்லூரி நிா்வாகம் கல்லூரியில் அனைத்துப் பிரிவுகளில் இடங்கள் நிரம்பிவிட்டதாகத் தெரிவித்தனராம்.

இதனால், மாணவா்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தகவலறிந்த திருத்தணி டி.எஸ்.பி. (பொ) குமரவேல் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். தொடா்ந்து, கல்லூரி முதல்வா் பூா்ணசந்திரன், திருத்தணி ஆா்டிஓ அஸ்ரத் பேகம், வட்டாட்சியா் வெண்ணிலா ஆகியோா் பேச்சு நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT