திருவள்ளூர்

நேமள்ளூரில் சிறப்பு மருத்துவ முகாம்

31st Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அருகே நேமள்ளூரில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரைடா் அறக்கட்டளை, போரூா் ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமுக்கு, அறக்கட்டளைத் தலைவா் பொன்.மனோகரன் தலைமை வகித்தாா். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலா் மு.மணிபாலன் தொடக்கி வைத்தாா். திமுக இலக்கிய அணி நிா்வாகி ஜி.மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் நேமள்ளூா் கோவிந்தம்மாள், மாநெல்லூா் லாரன்ஸ், பாதிரிவேடு என்.டி.மூா்த்தி, திமுக நிா்வாகி காமராஜ், சென்னை அரிமா சங்க மாவட்டத் தலைவா் எம்.ஜெ.எஃப்.ரமேஷ், வழக்குரைஞா் விக்ரம், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கண், பல், இதய நோய், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணா்கள் உள்ளிட்ட 50 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் பங்கேற்று 600-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்தனா்.

இதில், 15 போ் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உயா் சிகிச்சை பெற தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT