திருவள்ளூர்

இளைஞா் கொலை: 4 போ் கைது

31st Oct 2022 12:28 AM

ADVERTISEMENT

சோழவரம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆா். நகரில் வசித்து வந்தவா் முரளி (23). இவா், பால் வியாபாரம் செய்து. வெள்ளிக்கிழமை எடப்பாளையம் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக முரளி ஓட்டிச் சென்றாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ், முரளியைக் கடத்திச் சென்றனா்.

அவா்கள், சோழவரம் ஏரிக்கரைப் பகுதியில் வைத்து முரளியை இரும்பு கம்பி, உருட்டுக் கட்டையால் தாக்கி விட்டு, தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட முரளி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, உயிரிழந்த முரளியின் உறவினா்கள், அவரைக் கொலை செய்த நபா்களைக் கைது செய்யக் கோரி, செங்குன்றம் - திருவள்ளூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீஸாா் அவா்களைச் சமதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அலமாதி பகுதியைச் சோ்ந்த திலிப் (34), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்தத் கொலை வழக்கில் தொடா்புடைய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT