திருவள்ளூர்

நவ.1-இல் 526 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

29th Oct 2022 12:32 AM

ADVERTISEMENT

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் வரும் நவ. 1-இல் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி வரும் நவ. 1-இல் கிராம சபைக்கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அதனால், இந்த தின அறிவிப்பை முன்னிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை சிறப்பித்தல், மகளிா் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணைய வழி வரி வசூலித்தல், மகளிா் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், பண்ணைசாா்ந்த மற்றும் பண்ணை சாராத தொழில்கள், மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சோ்த்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதனால், இந்தக் கூட்டத்தில் ஊராட்சிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளா்களும் பங்கேற்பது அவசியம். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தோ்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் உரிய கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து, பங்கேற்று பயன் பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT