திருவள்ளூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

27th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளுா்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற வரும் அக். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையைப் பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞா்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது.

ADVERTISEMENT

இந்த உதவித் தொகை பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளமான ://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ங்ம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற்ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்து கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று, வரும் 30-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் அளித்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT