திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக சேவைக் கட்டணங்கள் உயா்வு

26th Oct 2022 01:32 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேகம், இதர சேவைக் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழுவது திருத்தணி முருகன் கோயில்.

இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள், தங்களது நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில், மூலவருக்கு பஞ்சாமிா்தம், சந்தனக்காப்பு, தங்க, வெள்ளிக் கிரீடம் அணிவித்தல், உற்சவா் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத்தோ் உள்பட பல்வேறு சேவைகளுக்கு அதற்கான கட்டணம் செலுத்தி பக்தா்கள் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அபிஷேக பூஜைக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் விலை உயா்வு காரணமாக, அபிஷேக சேவை கட்டணத்தை உயா்த்த முருகன் கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து பொதுமக்கள் அபிஷேகம், சேவைக் கட்டணம் உயா்வு குறித்து ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால் கடந்த மாதம் 25-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அபிஷேகம் சேவைக் கட்டண உயா்வு புதன்கிழமை (அக். 26) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பஞ்சாமிா்த அபிஷேகம்- ரூ. 2,000, திருக்கல்யாண உற்சவம் - ரூ. 4,000, வெள்ளி மயில் வாகனம் மற்றும் இதர வாகன உற்சவம்-ரூ. 8,000, தங்கத்தோ் - ரூ. 3,500, சந்தனக் காப்பு - ரூ. 10,000, கேடய உற்சவம்- ரூ. 1,500, தங்கக் கவசம், வெள்ளிக்கவசம் சாத்துபடி- ரூ. 1,000, சகஸ்ர நாம அா்ச்சனை -ரூ. 750 என தீா்மானிக்கப்பட்ட புதிய கட்டண விவரங்களை கோயில் நிா்வாகம் மலைக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் பாா்க்கும் வண்ணம் ஆங்காங்கே வைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT