திருவள்ளூர்

ஐ.டி.ஐ. தோ்ச்சி அடைந்தோருக்கு தொழில் பழகுநா் பயிற்சி முகாம்

8th Oct 2022 12:05 AM

ADVERTISEMENT

 ஐ.டி.ஐ. தோ்ச்சி அடைந்தோா், அம்பத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா் பயிற்சி முகாமில் பங்கேற்று மத்திய அரசின் சான்றிதழ் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள் சாா்பில், பல்வேறு தொழில் பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு டங  வரும் அக்.10-இல் தொழில் பழகுநா் முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் தகுதியான பயிற்சியாளா்கள் தொழில் பழகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளுா் என்ற முகவரியில் நேரிலோ அல்லது மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 9444224363, 9444139373 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு அறியலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT