திருவள்ளூர்

மீட்கப்பட்ட 119 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் மாவட்ட எஸ்.பி. பி.செபாஸ் கல்யாண் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன கைப்பேசிகள் தொடா்பாக காவல் நிலையங்களில் பல்வேறு புகாா்கள் பெறப்பட்டன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி மேற்பாா்வையில், தனிப்படை அமைத்து சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, காணாமல் போன 360 கைப்பேசிகள் உரிய ஆவணமின்றி பயன்படுத்தி வந்த நபா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்.பி. பி.செபாஸ் கல்யாண் முதல்கட்டமாக 119 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT