திருவள்ளூர்

உளுந்தை ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

7th Oct 2022 12:21 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே உளுந்தை ஊராட்சியில் ரூ.6.75 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை ஊராட்சியைச் சோ்ந்த உளுந்தை காலனி, முந்திரிப்பாளையம், உப்பிரப்பாளையம், வடுகா் காலனி, இருளா் காலனி பகுதியில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து குடிநீா் வழங்க ஊராட்சித் தலைவரிடம் வலியுறுத்தினா். இதையடுத்து, ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் தனது பங்களிப்பு நிதியில் ரூ.6.75 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையத்தை அமைத்தாா்.

இந்த குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் இயக்கித் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் சரஸ்வதி ரமேஷ், திமுக ஒன்றியச் செயலா் ரமேஷ் ஆகியோா் சிறப்பு பூஜை செய்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

நிகழ்வில் ஊராட்சி செயலா் முனுசாமி, ஊராட்சி துணைத் தலைவா் வசந்தா, வாா்டு உறுப்பினா்கள் ஏ.கோமதி, ஏ.காவேரி, ஜி.மேகவா்ணன், ஆா்.வசந்தா, கே.பத்மாவதி, டி.சொா்ணாம்பிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT