திருவள்ளூர்

வன துா்க்கையம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

வன துா்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள வன துா்க்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிறைவு நாளில் தீமிதி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது.

தினமும், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

இரவு 7 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.

பின்னா், உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நிகழ்ச்சியில், திருத்தணி நகர மக்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

அதேபோல், திருத்தணி சேகா்வா்மா நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இதேபோல், திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் உள்ள விஷ்ணு துா்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சுமங்கலி பூஜையும், தீச்சட்டி ஊா்வலமும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT