திருவள்ளூர்

நமக்கு நாமே திட்டத்தில் கோபுர மின் விளக்குகள்

6th Oct 2022 01:12 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகராட்சியில் 10 இடங்களில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.42 லட்சதில் உயா் கோபுர மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.

இந்த நகராட்சி 27 வாா்டுகளில் 504 தெருக்களில் உள்ள மின்கம்பங்கள் மூலம் விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், ரயில்வே மேம்பாலம், ஜே.என்.சாலை, ஊத்துக்கோட்டை சாலை வரை மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில், ரயில்வே மேம்பாலம், எம்எல்ஏ அலுவலகம் எதிரில், ஸ்ரீநிகேதன் பள்ளி எதிரில், வட்டாட்சியா் அலுவலகம் எதிரில், கோட்டாட்சியா் அலுவலக குடியிருப்பு எதிரில், டி.இ.எல்.சி. பள்ளி எதிரில் உள்ளிட்ட இடங்களில் தலா ரூ.4.20 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT