திருவள்ளூர்

பழங்கள் சிறப்பு அலங்காரத்தில் தணிகாசலம்மன்

6th Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை பழங்களால் சிறப்பு அலங்காரம், தீபாராதனையில் தணிகாசலம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருத்தணி அக்கைய்யா நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோயிலில், நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, காசி விசாலாட்சி, அன்னபூரணி, வாராகி, தனலட்சுமி, கஜலட்சுமி, துா்கை, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் ஒவ்வொரு நாளும் மூலவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

10-ஆம் நாளான புதன்கிழமை விஜயதசமியையொட்டி, மூலவருக்கு கலசாபிஷேகம் மற்றும் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயில் உள்பிரகாரத்தில் பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தணிகாசலம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை (அக். 6) வசந்த உற்சவம், அா்த்தநாரீஸ்வரா் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT