திருவள்ளூர்

ரயில்வே மேம்பாலப் பணி: எம்.பி. ஆய்வு

6th Oct 2022 02:50 AM

ADVERTISEMENT

நெமிலிச்சேரி- திருவள்ளூர் இடையே நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை எம்.பி. கே.ஜெயக்குமார் ஆய்வு செய்தார் .
அப்போது, அவர் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், குடிநீர் வசதி, நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா எனப் பார்வையிட்டு, அங்குள்ள பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், அங்கிருந்து திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் ஏறி பயணிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். காலை, மாலை நேரங்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதை நிறைவேற்றித் தருவதாக எம்.பி. வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து, அவர் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, புட்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்து, அந்தப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், பயணிகள் கூறிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.
ஆய்வின்போது, பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ரமேஷ், நிர்வாகிகள் கணபதி, குணாநிதி, ஆவடி யுவராஜ், அமீத்பாபு, விசுவநாதன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT