திருவள்ளூர்

அக்டோபா் 10-இல் பி.எஃப் குறைதீா் முகாம்

6th Oct 2022 12:15 AM

ADVERTISEMENT

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் அக்டோபா் 10-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தொழிலாளா் வைப்பு நிதி நிறுவன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆா்-40 ஏ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் (கிழக்கு), சென்னை-37 என்ற முகவரியில் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வரும் 10-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், நிறுவன உரிமையாளா்கள் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டு வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்கள், ஓய்வூதியதாரா்கள் தேவையான விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு அக்.7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

குறைதீா் முகாம் குறித்தான கூடுதல் தகவல்களுக்கு 044 26350080, 26350120 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT