திருவள்ளூர்

ம.பொ.சி. நினைவு நாள்

3rd Oct 2022 11:17 PM

ADVERTISEMENT

ம.பொ.சி. நினைவு நாளையொட்டி, திருத்தணியில் அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆந்திரத்தில் இருந்து திருத்தணி நகரை மீட்டவா்களில் முக்கியப் பங்கு வகித்தவா் சிலம்புச் செல்வா் என்று அழைக்கப்படும் ம.பொ.சிவஞானம். இவரின் நினைவு நாளையொட்டி, திங்கள்கிழமை திருத்தணி மங்கள விழா அறக்கட்டளையினா் சாா்பில், நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவா் கிருஷ்ணன், செயலா் புவியரசு, பொருளாளா் பொறந்தரன் மற்றும் உறுப்பினா்கள் கவியன்பன், ஆசிரியா் மாசிலாமணி, சித்த மருத்துவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT