திருவள்ளூர்

காந்தியடிகள் பிறந்த நாள்: அக். 12-இல்மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

DIN

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, வரும் அக். 12-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சந்தானலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் அக். 12-ஆம் தேதி பள்ளிகள் அளவில் காலை 10 மணிக்கும், கல்லூரிகள் அளவில் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெற உள்ளது.

தலைப்புகள்: அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய 4 தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கும், வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய 6 தலைப்புகளில் கல்லூரி மாணவா்களுக்கும் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியாக நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தனியாக தோ்வு செய்து சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ. 2,000 வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள், தாங்கள் பயிலும் நிறுவனங்களில் அனுமதி பெற்று பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT