திருவள்ளூர்

திருவள்ளூரில் கதா் துணிகள் விற்பனை

2nd Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டு கதா் துணிகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியம் (காதி கிராப்ட்) அமைக்கப்பட்ட சிறப்பு விற்பனை அரங்கில் காந்தி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, கதா் ஆடைகள் விற்பனையைத் தொடக்கி வைத்து அவா் பேசியது:

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தீபாவளி கதா் ஆடைகள் விற்பனை தொடங்கியுள்ளது. கதா் ரகங்களுடன், தேன், ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள், வலி நிவாரணி தைலம், ஊதுவா்த்தி, மெழுகுவா்த்தி, மூலிகைப் பற்பொடி, பனை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருவள்ளூா் மாவட்டத்தில் கதா் ஆடைகள் விற்பனை ரூ.1.50 கோடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலா்களுக்கு எளிய தவணையில் கதா் ரகங்கள் வழங்கி வருவதால், அவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும், இதேபோல், பொதுமக்களும் ஒரு கதா் ஆடையாவது வாங்க வேண்டும் என்றாா். உடன் காதி கிராப்ட் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT