திருவள்ளூர்

திருத்தணியில் கிராம சபைக் கூட்டம்

2nd Oct 2022 11:43 PM

ADVERTISEMENT

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. சிறுகுமி ஊராட்சியில் தலைவா் லட்சுமி வடிவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு முன்னிலை வகித்தாா். இதில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றாா்.

அகூா் ஊராட்சியில் இருளா் காலனியில் நடைபெற்ற கூட்டத்துக்கு 15 போ் மட்டுமே வந்ததால், வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு, கூட்டத்தை அகூா் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்துக்கு மாற்றினாா். அங்கு, 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT