திருவள்ளூர்

முருகன் கோயிலில் ரூ. 25, 150 சிறப்பு தரிசன வழிகள் மூடல்

1st Oct 2022 10:54 PM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 25 மற்றும் 150 சிறப்பு தரிசன டிக்கெட் வழிகள் அக். 1 முதல் மூடப்பட்டதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.

முருகன் கோயிலில், அறநிலையத் துறை வழிகாட்டுதல்படி, சிறப்பு தரிசன வழிகாட்டுதல் நெறிமுறைகளை அமல்படுத்த உத்தரவிடுமாறு கோயில் துணை ஆணையா் விஜயா, அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபருக்கு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து, சனிக்கிழமை (அக். 1) முதல் திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 25 மற்றும் 150 சிறப்பு தரிசன வழியை ரத்து செய்து அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சனிக்கிழமை முதல் ரூ.25 மற்றும் 150 சிறப்பு தரிசன வழிகள் மூடப்பட்டது. மேலும், மூலவா் முருகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தா்கள் 10 அடி தொலைவில் இருந்து தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

சிறப்பு தரிசனத்துக்கு வரும் உயரதிகாரிகள் உரிய அனுமதிக் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT