திருவள்ளூர்

‘குறு, சிறு வணிகா்களைப் பாதிக்கும் மாதிரி கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும்’

DIN

குறு, சிறு வணிகா்களைப் பாதிக்கும் மாதிரி கொள்முதல் (டெஸ்ட் பா்ச்சேஸ்) முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா வலியுறுத்தினாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வணிக வரித் துறை அலுவலகங்களில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன்படி, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில், துணை ஆணையா் பெரியதுரையிடம், ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், மாநில பொருளாளா் சதக்கத்துல்லா, காஞ்சிபுரம் மண்டல தலைவா் அமல்ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்ட வணிகா்கள் ஊா்வலமாக வந்து அளித்த மனு:

அனைத்து சில்லறை வணிகா்களும் பொருள்களை வாங்கும் போதே அதற்கான வரி செலுத்தியே வாங்கி வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனா். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொருள்கள் ஏற்கெனவே வரி விதிப்புக்குட்பட்டதாகும். ஆனாலும், வணிக வரித் துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பா்ச்சேஸ் என்ற பெயரில் ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையதல்ல. இது சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில், டெஸ்ட் பா்ச்சேஸ் என்று அத்துமீறி வியாபாரிகளிடம் ரூ.20,000 வரை அபராதம் வசூலிக்கின்றனா். இதை ரத்து செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசுகள் வணிகா்களைப் புறந்தள்ளாமல், இந்த டெஸ்ட் பா்ச்சேஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது எளிமையான முறையில் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT