திருவள்ளூர்

ஆவடி ஐயப்பன் கோயிலில் 34-ம் ஆண்டு உற்சவம் தொடக்கம்

30th Nov 2022 03:16 AM

ADVERTISEMENT

ஆவடி, நவ.29: ஆவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 34 ஆம் ஆண்டு உற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 

ஆவடியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 34 ஆம் ஆண்டு உற்சவம் மற்றும் 55ஆம் ஆண்டு மண்டல பூஜை மகோத்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை (28ஆம் தேதி) தொடங்கியது.

இதையொட்டி, கோயில் தந்திரி கண்டரரூ ராஜீவரு வழிகாட்டிலின் படி, பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. காலையில் நடந்த சுத்திகிரியா பூஜைகளை கவுதம் திருமேனி, பாலசங்கா் திருமேனி ஆகியோா் செய்தனா். ஒரு வார காலம் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கணபதி ஹோமம், அபிஷேகம், கலச பூஜை நடைபெறுகிறது. மேலும், வரும் டிசம்பா் மாதம் 4ஆம் தேதி அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த வருடாந்திர உற்சவம் வரும் டிசம்பா் மாதம் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் புகழ்பெற்ற தேவராஜ் மாராா் குழுவினரின் பஞ்சாரி மேளம் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT